கும்பகோணம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் நாகேஸ்வரன் திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா 4 ஆம் நாளான சுவாமிகள் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா வந்த நிழச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாக போற்றப்படும்.
பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மாள் ஓலைச்சப்பரத்தில், எழந்தருள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இழுத்து சென்றனர். 7ஆம் திருநாளாக நாளை திருக்கல்யாணமும் உற்சவமும், ஒன்பதாம் நாள் விழாவாக 23 ஆம் தேதி திருத்தேரோட்டம் பத்தாம் நாள் விழாவாக 24 ஆம் தேதி பஞ்சமூர்த்திகளும் மகாமக குளக்கரையில் எழுந்தருள பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது.


















