தஞ்சாவூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், திருக்கோடிக்காவல் மஞ்சனி ஐயனார் கோயில் பங்குனி திருவிழா விஷேச பூஜைகளுடன் சென்டை வாத்தியங்கள் முழங்க பெண்கள் முலைப்பாரி ஊர்வலத்துடன் மிகுந்த கோலாகலமாக தொடங்கியது.
திருவிடைமருதூர் அருகேவுள்ள திருக்கோடிக்காவல் அருள்மிகு பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ மஞ்சள் அய்யனார் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் ஆயிரக்கணக்கான வரலாறுகளை கொண்டு பல்வேறு சிறப்புகளுடன் விளங்கி வரும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
அதுப்போன்று நடப்பாண்டுக்கான அப்பங்குனி திருவிழா விசேஷ பூஜைகளுடன் நேற்றுத் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் அத்திருவிழாவினை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி பூஜை காப்பு கட்டுதலுடன் திருக்கோடி கவலையில் உள்ள திருக்கோடீஸ்வரர் கோயிலில் இருந்து செண்டை வாத்தியங்கள் முழங்க ஏராளமான பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 24-ஆம் தேதி திருத்தேர் வைபமும், 25ஆம் தேதி பால்குடம் மற்றும் சுவாமிக்கு மகா அபிஷேகமும் அன்றிரவு நாட்டுப்புற இசை கலைஞர்களைக் கொண்டு சிறப்பு இசை நிகழ்ச்சியுடன் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருள திருவீதியுலா காட்சியும் நடைப் பெறயிருப்பதாக விழாக் கமிட்டியினர் தெரிவித்தனர்.





















