திருவள்ளூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் ஷெல்டர் டிரஸ்ட் இணைந்து கீழச்சேரி சேக்ரட் ஹார்ட மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா நடைப்பெற்றது.
வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 800 பெண் குழந்தைகள் உட்பட 65- க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் கலந்து கொண்டனர். மேலும் அந்நிகழ்ச்சியின் போது பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து பெண் குழந்தைகள் நாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதுக் குறித்தும், பெண் குழந்தைகள் ஏமாற்றப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பெண் குழந்தைகளின் பாதுக்காப்பு மற்றும் நலன் குறித்து தனியார் தொண்டு நிறுவனமான ஷெல்டர் டிரஸ்ட் சார்பில் குறு நாடகங்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
மேலும் பப்பர் ஷோ மூலம் பெண் குழந்தைகளை மகிழ்வித்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் மற்றும் 1098 அவசர தொடர் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது
சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிஷாந்தினி மற்றும் மலர்விழி பள்ளி தாளாளர் வெரோனிகா, பள்ளி தலைமை ஆசிரியை சிஸ்டர் ஷீபா, ஷெல்டர் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் சாலமன் ராஜா ஆகியோர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.


















