திருவாரூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது மர்ம நபர்களால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, திருவாரூரில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
.திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திருவாரூர் மாவட்ட பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையினர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மூத்த பத்திரிகையாளர் ஜெயராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளருக்கு அரசு சார்பில் உயர்ந்த சிகிச்சை அளிக்க வேண்டும், குற்றவாளிகள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த பத்திரிகையாளர் நவமணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.





















