திருவாரூர், டிச. 08 –

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலப் பாதிப்பால் கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லையெனவும் இருப்பினும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் எனவும் அம்மருத்துவமனை அளித்த மருத்துவ அறிவிப்பு ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்பால் பற்றுக் கொண்ட பொது மக்கள் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் என அனைத்து தரப்பினர். கேப்டன் பூரண நலம் பெற வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிப்பாடு செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்  பூரண உடல் நலம்பெற வேண்டி  திருத்துறைப்பூண்டி நகர ஒன்றிய தேமுதிக சார்பில் முள்ளாட்சி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு,மாவிளக்கு எடுத்தல், அன்னாதானம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவாரூர் மாவட்ட தேமுதிக செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் திருத்துறைப்பூண்டி கோட்டூர் மன்னார்குடி பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here