மீஞ்சூர், ஜூன். 21 –

கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கநாள் விழாவினை எஸ்.டி.பி.ஐ.கட்சியினர், தமிழ்நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக இன்று கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட அக்கட்சியின் மீஞ்சூர் நகரம் சார்பில் அரியன்வாயல் பகுதியிலும் இவ்விழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் இவ்விழாவிற்கு, நகர தலைவர் செய்யது அப்துல்காதர் தலைமை வகித்தார். பொன்னேரி தொகுதி தலைவர் சைனூர், செயளாலர் முஹமது புகாரி,  துனை தலைவர் ஹபிப் ரஹ்மதுல்லா,  செயற்க்குழு உறுப்பினர்கள் தமிம்அன்சாரி, நிஜாமுதின், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது அஹமது, துனை தலைவர் பாஸித்ற்றும் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு, இனிப்புகளை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி வாழ் மக்களுக்கு, மரக்கன்றுகள் மற்றும் நல திட்ட உதவிகளையும் அக்கட்சியினர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் அக்கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here