கும்பகோணம், ஏப். 06 –
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் உறவழகன், தலைமையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ், மண்டல செயலாளர் விவேகானந்தன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தமிழனி, தொகுதி செயலாளர்கள் முல்லைவளவன், திருவிடைமருதூர் சந்திரசேகர், பாபநாசம் தமிழன், மாநில துணைச் செயலாளர் ரஜினிகாந்த், கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் அரசாங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழருவி, ஒன்றிய செயலாளர்கள் சசிக்குமார், விடுதலைச்செல்வன், இளங்கோவன், விவசாய அணி மாநில செயலாளர் வெண்மணி, வழக்கறிஞரணி மாநில செயலாளர்கள் நந்திவனம் பாலா, தங்க.ரவணன், மாநகர செயலாளர் கலையரசன், மாநகர பொருளாளர் ரவிமன்னன், ஒளியவன், தொல்குடி, ராஜ்குமார், கரிகாலன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களும் மேலும் திரளான அக்கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் எதிர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி பாஜக மோடியின் எதர்ச்சியதிகார போக்கை கண்டித்தும், ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்தும், மேலும் ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சையில் நடைபெறும் பேரணியில் பெருந்திரளாக கலந்து கொள்வது என்றும் கும்பகோணம், திருவிடைமருதூர், பகுதியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் கலந்து கொள்வதும் என்றும், மேலும் புரட்சியாளர் அம்பேத்கர் 132 வது பிறந்த நாளை வெகுச் சிறப்பாக கொண்டாடுவது என்றும் மேலும் அவ்விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும், அம்பேத்கர் வெங்கல சிலை கும்பகோணத்தில் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இம்மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றினார்கள்.



















