கும்பகோணம், ஏப். 05 –
கும்பகோணம் மாநகரம், பாபநாசம் தாலுக்கா, மேலவழுத்தூரில் உள்ள ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோயிலாகும்.
மேலும் இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைப்பெற்று வருகிறது. மேலும் இன்று பங்குனி உத்திரம் என்பதால் இத்திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளும் நடைப்பெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து இந்நாளில் அவரவர் குலதெய்வங்களை வழிபாடு விதமாக அவர்களது குலத்தெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதென்பது வெகு சிறப்பாகும்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். மேலும் அதனைத்தொடர்ந்து அத்தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்கள்.
மேலும் அத்தம்பதியினரின் அவ்விருக் குழந்தைகளுக்கு பெயர்களை சூட்டுவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைப்பெற்று, அக்குழந்தைகளின் பெயர்களை விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் அறிவித்தனர். அதில் ஒரு மகனுக்கு ‘உயிர் ருத்ரேனில் என் சிவன்’ என்றும் மற்றொரு பிள்ளைக்கு ‘உலக தெய்வேக் என் சிவன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், இந்நிலையில் பங்குனி உத்திர நாளன்று குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த சிறப்புகளை தரும் என்பதால் அவர்கள் இருவரும் அவர்களின் குலத்தெயவமான மேலவழுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வருகை தந்து குலத்தெய்வ வழிப்பாட்டினை மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். தொடர்ந்து கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வார் கோவிலுக்கு வருகை தந்து குடும்ப சகிதமாக சாமி தரிசனம் செய்தார்கள்.






















