மீஞ்சூர், மார்ச். 22 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபாக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிலையில் இதன்பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இச்சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி நடைப்பெற்றது.
மேலும் அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டக்கரை, அத்திப்பட்டு, நெய்தவாயல், நந்தியம்பாக்கம், கல்பாக்கம், நாலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இச்சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
மேலும் நடைப்பெற்ற அக்கூட்டங்களில் பொது மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் குடிதண்ணீர் குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகிகளிடம் முக்கிய கோரிக்கைகளாக முன் வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மின்விளக்குகள். சாலை வசதி. 100 நாள் வேலை திட்டம். ஊராட்சி மன்ற சார்பில் தொகுப்பு வீடுகள் கேட்டும் மக்கள் மன்றத்தில் தீர்மானங்களாக முன்வைத்து கூட்டம் நடைபெற்றது.
மேலும் கொண்டக்கரையில் ஊராட்சி செயலர் முருகன், நந்தியம்பாக்கம் ஊராட்சி கலாவதி நாகராஜன், அத்திப்பட்டு ஊராட்சி சுகந்திவடிவேல், துணைத் தலைவர் எம்.டி. ஜி. கதிர்வேல், நெய்த வாயல் ஊராட்சி பாலன், .கல்பாக்கம் ஊராட்சி பிரியங்கா துரைராஜ், நாலுர் சுஜாதாரகு. உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் முன்னிலையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. மேலும் இவ்வூராட்சிகளில் நடைப்பெற்ற கிராம சபாக் கூட்டத்தில் அந்தந்த ஊராட்சிப்பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் திரளாக வருகைத் தந்து இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.