இளவங்கார்குடி, மார்ச். 05 –

திருவாரூர் மாவட்டம், இளவங்கார்குடி ஊராட்சிக்குட்பட்ட தொழுவனங்குடி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது‌. இவ்விழாவினை முன்னிட்டு நேற்றிரவு இங்கு அமர்ந்திருக்கும் அம்மனின் திரு வீதிவுலா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான மக்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர்.

மேலும், இவ்வாலயத்தில் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி, ஸ்ரீ பாலாம்பிகையம்மன், ஸ்ரீ குமர விநாயகர், ஸ்ரீ உத்தன்ராயர், ஸ்ரீ கருமாரியம்மன் ஆகிந அம்மன்கள் பல்வேறு வடிவில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

மேலும் நேற்றிரவு நடைப்பெற்ற அம்மன் திரு வீதிவுலாவின் போது, அப்பகுதியில் மக்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேளதாளங்கள் முழங்க மின்விளக்கு அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா கட்சியானது இரவு முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளோடு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி இரவு முழுவதும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை கே.பி. பில்டர்ஸ் பெருமாள்  குடும்பத்தார் மற்றும் கிராமவாசிகள், பக்தர்கள், மருளாளிகள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். மேலும் அந்நிகழ்வில் பங்கேற்று அம்மன் வீதியுலா கட்சியானது வெகு விமர்சையாக நடைபெற துணைப்புரிந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here