திருவாரூர், பிப். 24 –
திருவாரூர் அருகேவுள்ள மஞ்சக்குடியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெரஞ்சன் உரை நிகழ்த்தும் போது, பள்ளிக்கல்வி முடித்து கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 50 விழுக்காடுக்கு மேல் இருக்கிறது என அப்போது தெரிவித்தார் மேலும் அதற்கான முழு காரணம் தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக கல்வியை ஜனநாயகபடுத்தியதின் பலன் தான் எனவும் மாணவ மாணவிகள் மத்தியில் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழர் பண்பாட்டினை இளைய தலைமுறைக்கு எடுத்து கூறும் ஆரோக்கியமான விஷயத்தை முன்னிறுத்தி “மாபெரும் தமிழ் கனவு” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர்களின் மரபு, நாகரீகம், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், கல்வி புரட்சி என அனைத்தையும் இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறி நமது பண்பாட்டை பாரம்பரியத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனின் முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் கவிஞர் யுகபாரதி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.மேலும், இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ்நாடு மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் உரை நிகழ்த்தும் போது, பள்ளிக்கல்வி முடித்து கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 50 விழுக்காடுக்கு மேல் இருக்கிறது. இதற்கு முழு காரணம் தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கல்வியை ஜனநாயகபடுத்தியதின் பலன் தான் . தற்போது கல்வியின் தரத்தை மேலும் உயர்த்துவதற்காக தான் தமிழக அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவும்,
இதன் தொடர்ச்சியாக தற்போது மாபெரும் தமிழ் கனவு என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதும் கல்வியை ஜனநாயகப்படுத்துவதும் மட்டுமே இதன் நோக்கமாக உள்ளது எனவும், வளர்ச்சியை ஜனநாயகப்படுத்துவதில் கல்வி மிகப்பெரிய பங்காற்றுகிறது என அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவிலேயே உணவு இல்லாமல் இரவு உறங்க செல்லும் மனிதர்கள் இல்லாத நிலை தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. ஒரு மனிதனை இன்னொரு மனிதரிடம் உணவுக்காக கையேந்தும் நிலை இல்லாத மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் எனவும் மேலும் இது ஒரு மாபெரும் சமூக புரட்சி எனவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
இதுப்போன்ற நிலை இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இந்த ஒரு சமூக புரட்சி இல்லை. எனவும், உணவு, கல்வி இவை இரண்டும் கிடைத்தால் பல விஷயங்கள் தானாகவே மக்களுக்கு கிடைத்து விடும். இதன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது. என்றார்.
மேலும், 40 ஆண்டுகளுக்கு முன் பீகார் மாநிலமும் தமிழ்நாடும் ஒரே அளவில் இருந்தன என்ற அவர், அதன் பின். 1980களில் இரண்டு மாநிலங்களிலும் தனி நபர் வருமானம் 2000 ரூபாய். ஆனால் இன்று அவர்களுக்கு 2000 ரூபாய் நமக்கு எட்டாயிரம் ரூபாய். தமிழகத்தின் தனிநபர் வருமானம் மொத்தம் நான்கு மடங்கு கூடி இருக்கிறது.என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடி. உத்தர பிரதேசத்தின் மக்கள் தொகை 22 கோடி. ஆனால் தமிழகத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் உத்தரப்பிரதேச மாநிலத்தை விட நான்கு மடங்கு அதிகம். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தமிழனும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபரை விட நான்கு மடங்கு அதிகமாக வருவாய் பெறுவதற்கு காரணம் வளர்ச்சியை ஜனநாயக படுத்தியதன் காரணமாகத்தான் இந்த வளர்ச்சி நடந்துள்ளது என்றுக் கூறி அவரது உரையை நிறைவுச் செய்தார்.























