சென்னை, ஜன. 19 –
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் 16 நாடுகள் பங்கேற்கும் 15 வது ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி நடைப்பெற்று வருகிறது. அதனைக் காணவும், மேலும் அம்மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் பார்வையிடவும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
மேலும் உலக நாடுகளில் 16 நாடுகள் பங்கேற்கின்ற 15 வது ஆண்கள் பிரிவிற்கான உலக க்கோப்பைப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய இடங்களில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி எதிர்வரும் ஜனவரி 29 ஆம் தேதி 2023 வரை நடைப்பெறுகிறது.
மேலும் இப்போட்டிகளை காணவும் அம்மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புளை பார்வியிடவும் நேற்று 18 ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அம் மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
மேலும் அம் மாநிலத்திற்கு சென்ற அமைச்சரை ஹாக்கி இந்தியா பொருளாளர் சேகர்மனோகரன், ஹாக்கி இந்தியா செயல் இயக்குநர் கமாண்டர் ஸ்ரீவத்ஸா மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் புவனேஸ்வர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
மேலும், இந்நிகழ்வின் போது, ஒடிசா மாநில உணவுத்துறை அமைச்சர் அட்னுசபயாச்சி நாயக், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி.கலாநிதி வீராசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைமச் செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், மேலும் ஒடிசா மாநில வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் மதிவதனன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி இன்று புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தில் கால்பந்து,ஹாக்கி, தடகள மைதானம், நீச்சல் குளம் மற்றும் துப்பாக்கி சுடும் அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு அதன் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஒடிசா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் துஷார்கன்டி பெகரா மற்றும் விளையாட்டுத்துறை சிறப்பு செயலாளர் வினில் கிருஷ்ணா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி.கலாநிதி வீராசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைமச் செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், ஒடிசா மாநில விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாக தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.






















