கும்பகோணம், அக். 03 –

கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுகா பாஸ்கரராஜபுரத்தில், லலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஸ்யம் இயற்றிய பாஸ்கர ராயருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு தினசரி பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

பிரசித்தி பெற்ற இந்த மணிமண்டபத்தில் உலக நன்மைக்காகவும் உலக நலன் வேண்டியும், 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்கினால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தீபம் ஏற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து கோயிலில் உள்ள லலிதாம்பிகைக்கு சிறப்பு நாம அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here