திருவாரூர், செப். 17 –
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி. ராஜா குழந்தைகளுக்கு சிற்றுண்டியை வழங்கி துவக்கி வைத்தார்.
தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் இத்திட்டத்தினை நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஜைனத் பள்ளி குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் காயத்ரி தலைமையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி குத்து விளக்கு ஏற்றி வைக்க மாமவட்ட ஆட்சித்தலைவரும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜாவும் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளில் முதல் கட்டமாக மன்னார்குடி நகராட்சி ஜைனத் தெரு தொடக்கப்பள்ளியில் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைக்கப்பட்டு இங்கிருந்து மற்ற பள்ளிகளுக்கு காலை உணவு கொண்டு சென்று வழங்கிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மற்ற பள்ளிகளுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனத்தையும் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் என்பது பள்ளி குழந்தைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும், மேலும் இத்திட்டத்தால் குழந்தைகளின் கற்றல் எண்ணிக்கை உயரும் எனவும், இடைநிற்றல் என்பது குழந்தைகளிடம் வெகுவாக குறையும் எனவும் மேலும் இத்திட்டத்தினை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
பேட்டி: சங்கீதா, திலகவதி – குழந்தைகளின் பெற்றோர்கள்

















