மீஞ்சூர், செப். 01 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் மாவட்ட பேரிடர் மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்மகாமிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி வடிவேல் தலைமை வகித்தார். பொன்னேரி கூடுதல் சிறப்பு வட்டாட்சியர் சுமதி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, மீஞ்சூர் வட்டார தலைமை மருத்துவர் ராஜேஷ், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் இணை இயக்குனர் ரூபேஷ்குமார் கலந்து கொண்டு பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினரும் மற்றும் அத்திப்பட்டு தீயணைப்பு துறையினர் ஒன்று சேர்ந்து கிராம மக்களிடம் புயல் ,வெள்ளம், பாதிப்புக்களில் இருந்தும் தீ பற்றி எரியும் நேரங்களிலும், மின்சார பாதிப்புகளிலிருந்தும்  தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது எனவும், மற்றவரை எப்படி மீட்பது என்பதனையும், மிக எளிமையாக செயல்முறை விளக்கங்களுடன் எடுத்துரைத்தும் செய்முறை விளக்கங்களுடன் செய்தும் காட்டினர்.

நிகழ்ச்சியின் துவக்கமாக அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இருந்து ஆரம்பித்து காளியம்மன் கோவில் அருகில் பக்கிங்காம் கால்வாய் நீர்வீச்சில் வெள்ள அபாயத்திற்கான மீட்பு பயிற்சிகளையும் செய்து காட்டினர்.அதனைத் தொடர்ந்து அத்திப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற  மருத்துவ முகாம். மற்றும் கால்நடைகளுக்கு மருத்துவமும்  நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வட்டாரத்தில்  அடங்கிய சோழவரம் .மணலி புதுநகர். பொன்னேரி. திருவெள்ளைவாயல் .உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து  சுகாதாரத்துறை ,கால்நடை பராமரிப்புத்துறை ,நெடுஞ்சாலை துறை ,பொதுப்பணித்துறை, மின்சாரதுறை, உள்ளிட்ட அனைத்து துறைகளிலிருந்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர், இதில் பாலகிருஷ்ணன் மீஞ்சூர் அபூபக்கர் .ஜாகீர். பொற்கொடி. கோமதிநாயகம். உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here