காஞ்சிபுரம், ஆக. 26 –
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், ரெட்டமங்கலம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக, தமிழக அரசு மாணவர்களின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் நமது ரெட்டமங்கலம் அரசினர் மேல்நிலை பள்ளியில் 100 சதவிகிதம் தேர்ச்சியை கொடுக்க வேண்டும், எனவும் பொது தேர்வில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும் எனவும் மாணாக்கர்களிடம் உரைநிகழ்த்தும் போது தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் பள்ளிக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் செய்து தரப்படும் என பேசினார்.