திருவாரூர், ஆக. 18 –
பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்ததாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது குற்றம் சுமத்தியும் கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மீது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக பொய் வழக்கு போட்டு கைது செய்ததாக மாவட்ட காவல்துறை மீது குற்றம் சாட்டியும், கண்டனம் தெரிவித்தும் நேற்று மாலை பாஜக மாநில பொதுச்சயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
.இதில் பங்கேற்ற மாவட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றியதை தொடர்ந்து, இறுதியாக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தேசிய செயற்குழு உறுப்பினர் தங்க. வரதராஜன் மாவட்ட தலைவர்கள் நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ், மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில் அரசன் செல்வம் மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன் சி எஸ் கண்ணன் மாநில விவசாய அணி செயலாளர் கோவி. சந்துரு மற்றும் பிற மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.