பொன்னேரி, ஆக. 18 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், காட்டாவூரில் திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜோதி தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், வருவாய் துறை சார்பில் ஊனமுற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை 25 பேருக்கும், உட்பிரிவு பட்டா, பட்டா நகல், கிராம நத்தம் பட்டா 30 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை, விதவை சான்று, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை 80 பயனாளிகளுக்கும், சிறுகுறு விவசாயிகள் சான்று, முதல் பட்டதாரி சான்று, பழங்குடியினர் நல வாரிய அட்டை 23 பேருக்கும், வேளாண்மை துறை சார்பில் மண் வளம் அட்டை, தார்பாய் , திரவ நுண்ணுயிர் உரம் (பாஸ்போ) திரவ நுண்ணுயிர் உரம் ( அசோஸ்பயிர்இல்லம் ) 5 பயனாளிகளுக்கும் என மொத்தம் 163 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாமும் நடைப்பெற்றது. பொன்னேரி வட்டாட்சியர் எஸ்.செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை காட்டாவூர் ஊராட்சி மன்ற தலைவர் மங்கை உமாபதி செய்திருந்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.