காஞ்சிபுரம், ஆக. 03 –
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தென்னேரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதால் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்னேரி ஏரியில் எடுக்கும் மண்ணை, சாலை விரிவாக்க பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆனால் இவ்வாற்றில் எடுக்கப்படும் மண், தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அளவுக்கு அதிகமாக ஆழத்தை ஏற்படுத்தி மண் எடுப்பதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரியில் ஒன்று தென்னேரி ஏரியாகும், இதனை நம்பி 10 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தண்ணீர் இருக்கும் ஏரியில் மண் எடுப்பது என்பது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தனர். எனவே, மண் முறையாக எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.