கும்பகோணம், ஜூலை. 29 –

கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசு விதித்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீதம் விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை உடனே திரும்ப பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு தீண்டாமை ஒழிப்பு மாநில செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் செந்தில்குமார் ஒன்றிய செயலாளர் அருளரசன் மாவட்ட குழு நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினர் கலந்து கொண்டு கையில் செங்கொடி ஏந்தி கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here