கும்பகோணம், ஜூலை. 05 –

கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதியில் கடந்த 19 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

மேலக்காவேரி பகுதி 2வது வார்டு முதல் 5வது வார்டு வரை தொடர்ந்து கடந்த 19 நாளாக குடிநீர் வராததை கண்டித்தும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வேலைக்காரி சுவாமிமலை சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஆய்வாளர்கள் பேபி  ரமேஷ்குமார் போக்குவரத்து மற்றும் கிழக்கு காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப் பேச்சு வார்த்தையில் அவர்களது குறைகளை மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here