கும்பகோணம், ஜூன். 14 –
தமிழகத்தில் தொடர்ந்து வரும் ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட சிறப்பு தனிச்சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்றிட வேண்டும் எனவும், சோழபுரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மணமகன் மோகன் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மேலும், குற்றவாளிகள் அனைவரையும் முழுமையாக கைது செய்ய வேண்டும் என கும்பகோணத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் செல்லக்கண்ணு தெரிவித்தார்.
கும்பகோணம் அருகேவுள்ள சோழபுரத்தில் நேற்று மாலை, காதல் திருமணம் முடிந்து 5 நாட்களே ஆன மோகன் சரண்யா தம்பதியர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் செல்லக்கண்ணு தலைமையிலும், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சின்னை பாண்டியன் முன்னிலையிலும், அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் தோழமை இயக்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்;சி, சிபிஎம்எல், விடுதலை சிறுத்தைகள், நீலப்புலிகள் அமைப்பு, மக்கள் ஜனநாயக கட்சி, மற்றும் தோழமை கட்சிகள், இயக்கங்களை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு ஆணவக்கொலைகளைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பேட்டி : செல்லக்கண்ணு மாநில தலைவர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி



















