கும்பகோணம், ஜூன். 10 –

கும்பகோணத்தில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் இல்லை என்று கூறியதால் ஊழியரை காவலர் தாக்கும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் வினோத் என்ற காவலர், நேற்று இரவு  பேருந்து நிலையம் அருகில் திடலில் உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்தத்தில் அவரது வாகனத்தை நிறுத்த சென்றுள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர் அன்பழகன், வாகனம் நிறுத்துவதற்கு இடம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர் அருகில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சுந்தரம் என்ற காவலரை அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அந்த ஊழியரை காவலர் வினோத் தாக்கியுள்ளார். இந்த காட்சி அந்த இருசக்கர வாகன ஸ்டாண்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் இதுகுறித்து இரு சக்கர வாகனம் நிறுத்தத்தில் பணிபுரியும்  ஊழியர் அன்பழகன் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் அச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here