திருவாரூர், மே. 30 –
மினி பேருந்தில் கொண்டுவரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து பலத்த காயங்களுடன் கல்லூரி மாணவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப் பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் வடகரையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த மினி பேருந்தில் பழனி மற்றும் குமார் ஆகிய இரண்டு நபர்கள் 5 லிட்டர் ஆசிட் எடுத்து வந்துள்ளனர். அப்பொழுது ஆசிட் பாட்டில் பேருந்துக் குள்ளேயே கீழே விழுந்து உடைந்தது.
அருகில் அமர்திருந்த திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் பயின்று வரும் மூன்றாமாண்டு பயின்று வரும் மாணவி பிரியா என்பவர் மீது ஆசிட் பட்டு பலத்த காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தகவலறிந்து அங்கு வந்த திருவாரூர் தாலுகா காவல் துறையினர் இவ்விபத்துக் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






















