ஆவடி, ஏப். 24 –
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த இந்துக் கல்லூரி பேருந்து நிலையம் அருகே இன்று மாலை ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய 202 பேருந்து வழக்கம்போல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து 5 மணி அளவில் பயணிகளுடன் புறப்பட்டது.
இந்துக்கல்லூரி பேருந்து நிலையம் அருகே வந்து நிற்கும் பொழுது குடிபோதையில் இருந்த 2 வாலிபர்கள் பின்புற கண்ணாடி மீது கற்களை வீசி உடைத்து விட்டு அங்கிருந்து இந்துக்கல்லூரி ரயில்நிலையம் அருகே ஓடிச் சென்று மறைந்து விட்டனர்.
உடனடியாக அரசு பேருந்து நடத்துனர் அவர்களை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து உடனடியாக பேருந்து , நடத்துனர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த பட்டாபிராம் காவல்துறையினர் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேருந்தில் அதிக பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து எதுவும் பெரிய அளவில் நடைப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






















