செங்கல்பட்டு, ஏப். 14 –
வேட்டி சட்டை துண்டு அனிந்து சாதாரன மக்கள்போல் சென்ற வண்டலூர் தாசில்தார் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 லாரி ஒரு ஜேசிபி சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தாழம்பூர் பகுதியில் தொடர்ந்து நள்ளிரவுகளில் மணல் கொள்ளை நடப்பதாக மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
ரகசிய தகவலை தொடர்ந்து நள்ளிரவில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்க வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் மாறு வேடத்தில் சென்று லாவகமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் லாரி மற்றும் ஜேசிபியை சிறைபிடித்துள்ளார்.
வேட்டி சட்டை துண்டு என சாதாரன மக்கள்போல் தகவல் கிடைத்த இடத்திற்கு சென்ற தாசில்தார் நள்ளிரவில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த 2 லாரி 1 ஜேசிபியை சிறைபிடித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
லாரி மற்றும் ஜேசிபி ஓட்டுநர்கள் உதவியாளர்கள் என அனைவரும் தாசில்தார் வாகனத்தை பிடித்ததும் இருட்டை பயன்படுத்தி அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளனர்.
வண்டலூர் தாசில்தாருடன் மாம்பாக்கம் கிராம உதவியாளர் மோகன், கொளத்தூர் கிராம உதவியாளர் பாண்டியராஜன், ஊரப்பாக்கம் கிராம உதவியாளர் இளையராஜா ஆகியோர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனத்தை பிடித்துள்ளனர்.
தொடர்ந்து நள்ளிரவுகளில் மணல் கொள்ளை ஆங்காங்கே நடைபெற்று வருவதாகவும் இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுவர்கள் குறித்து தகவல் அறிந்தால் மாவட்ட ஆட்சியர்க்கு தகவல் தெரிவிக்குமாறு தாசில்தார் ஆறுமுகம் கூறினார்.























