ராசிபுரம், ஏப். 06 –
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், கட்சியின் ஸ்தாபன நாள் நிகழ்ச்சி மக்களபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு சிறப்பாக நடந்தது. இதில், ஒன்றிய தலைவர் A.K.பாஸ்கர் தலைமை வகித்து கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். இதனை தொடர்ந்து, நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித், ஒன்றிய பார்வையாளர் கதிரேசன், ஒன்றிய பொதுச்செயலாளர் பழனிவேல், மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் M.P.இராமசாமி, ஒன்றிய துணைத்தலைவர் சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் பச்சமுத்து, பட்டியல் அணி தலைவர் ராஜமாணிக்கம், அமைப்பு சாரா பிரிவு தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பிரகாசம், ரவி கல்வியாளர் பிரிவு இராஜமாணிக்கம், IT பிரிவு குமார், சங்கர் கணேஷ், மாவட்ட ST அணி தலைவர் வேலு ஒன்றிய விவசாய அணி பொதுச்செயலாளர் மணி, காளியப்பன், ஜோதி, கணேசன், ராமலிங்கம், சாந்தி, விஜயா, முன்னாள் படைவீரர் பிரிவு பலராமன், முனிராஜன், ஊரக மற்றும் நகர் வளர்ச்சி பிரிவு தலைவர் அரவிந்த் குமார், மாவட்ட ST அணி துணைத் தலைவர் மணிகண்டன், தும்பல் பட்டியை சேர்ந்த புதிய உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.























