ஆரணி, ஏப். 06 –

ஆரணியில் பாரதிய ஜனதா கட்சி 42 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இலவச நீர். மோர், பந்தலை திறந்து வைத்து குளிர்பானங்கள் மற்றும் பழவகைகளை வழங்கி அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 42-ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவினை கொண்டாடும் விதத்தில் பாஜகவினர் அப்பகுதியில் பல இடங்களில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தும், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தைப் போக்கவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  நீர் மோர் பந்தல் திறந்து வைத்தனர்.

இந்த இலவச பந்தலில் மோர், இளநீர், குளிர்பானங்கள், பழவகைகள், என பல்வேறு வகையான வைக்கப்பட்டிருந்தன. பின்பு அப்பகுதி பொதுமக்களுக்கு  அதனை வழங்கினர். இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தார்கள்.

இநநிகழ்ச்சியில்  சோழவரம் ஒன்றிய தலைவர் ஆர்.சி.பாலாஜி ஒன்றிய துணைத் தலைவர் பவுர்ணம், ஒன்றிய பொதுச் செயலாளர் ஜெயக்குமார்,ஆரணி பேரூராட்சி 15-ஆவது வார்டு கவுன்சிலர் குமார்,ஒன்றிய செயலாளர் டில்லி, தியாகராஜன், ராஜா நகரதலைவர் விவேக் அர்ஜுன், துணைத் தலைவர் குணசேகரன், மற்றும் கார்த்திக் ஜேம்ஸ் என்ற செல்லமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here