பொன்னேரி, மார்ச். 17 –

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்லில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர், மற்றும் .துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அனைவரும்,  மரியாதை நிமித்தமாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரை சட்ட மன்ற அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்பு, நாளைய தினம் நடைபெறயிருக்கின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆரணி பேருராட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் தலைவர் ராஜேஷ்வரி, துனைத்தலைவர் வழக்கறிஞர் சுகுமாரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஹேமபூஷணம், மற்றும் கவுன்சிலர்கள் கௌசல்யா .பிரபாவதி சேஷாத்ரி. ரகுமான்கான் .உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here