கும்பகோணம், மார்ச். 07 –
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மற்றும் தேவர் பேரவை சார்பில் மதுரையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மற்றும் தேவர் சமுதாய பொது மக்கள் இணைந்து மதுரை மாவட்டம் மேலூர் தும்பைப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை லவ் ஜிகாத் எனும் அமைப்பினர் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்த கொலையாளிகளை கண்டித்தும், வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு கடுமையான சட்டங்கள் இயற்ற கோரியும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும், லவ் ஜிகாத் எனும் அமைப்பு கேரள மாநிலத்திலிருந்து ஊடுருவி தமிழகத்தில் தலைதூக்க துவங்கியிருக்கிறது. இதை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசும் காவல் துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதச்சார்பற்ற நாட்டில் மதத்திற்கு தகுந்தாற்போல் ஒரு சட்டத்தை கையாளுகின்ற தமிழக அரசையும் தமிழக காவல்துறையின் போக்கை கண்டிப்பதாகக் தெரிவித்து, இந்துமக்கள் கட்சி அனுமான் சேனா மற்றும் தேவர் பேரவையினர் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டி கையில் மெழுகுவர்த்தியுடன் மாவட்ட பொதுச் செயலாளர் பூக்கடை ஆனந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பாலா நகர தலைவர் பிரபாகரன் மற்றும் முக்குலத்து புலிகள் கட்சியின் தலைவர் சபரி தேவர் மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் இளையராஜா மாவட்ட செயலாளர் வி.செல்வபாண்டியன் சேர்வைக்காரர் நகர செயலாளர் வெங்கடேஷ் ஆறு தேவர் முக்குலத்து புலிகள் கட்சி நகர செயலாளர் சபரி தேவர், கணபதி தேவர் தேமுதிக முன்னாள் நகர செயலாளர் அழகர் பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நகரச் செயலாளர் ரமேஷ், தேவர் மற்றும் அகில இந்திய முக்குலத்தோர் பாசறை ராமன் தேவர் மற்றும் பரத் பசும்பொன் பாண்டியன் கல்கண்டு ரங்கராஜன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.






















