கடம்பத்தூர், பிப். 28 –

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆஞ்நேய நகரைச்சேர்ந்த அண்ணய்யா என்பவரின் மகன் ரஜினி அவருக்கு அமலு என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் கணவன் மனைவி இருவரும் கடம்பத்தூர் அருகே உள்ள காரணி கிராமத்தில் செங்கல் சூளையில் கல்லறுக்கும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.

   இந்நிலையில் நேற்று வேலை நிமித்தமாக ரஜினி தனது தம்பிமுறை சொந்தக்காரரின் ஹோண்டா டயோ எனும் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு அதில் தனது மனைவியுடன் காரணி கிராமத்தில் உள்ள செங்கல் சூளைக்கு செல்லும் வழியில் அதிகாத்தூர் கூவம் ஆற்றுப்பாலம் அருகே திடீரென டயர் வெடித்து வாகனம் நிலைதடுமாறியதில் பின் பக்கம் அமர்ந்திருந்த ரஜினி மனைவி அமலு கீழை விழுந்ததில் தலை,காது மற்றும் மூக்குப் பகுதிகளில் காயம் ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனிக்காமல் மருத்துவமனையில் இறந்து விட்டார். இதுக்குறித்து கடம்பத்தூர் காவல்நிலையத்தில் ரஜினி அளித்துள்ள அப்புகாரில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தனது உடலை உடல்கூறு ஆய்வு செய்து தங்கள் குல வழக்கப்படி தனது மனைவியின் உடலை அடக்கம் செய்ய மருத்துவமனையில் இருந்து பெற்றுத்தருமாறும் அதில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here