வெங்கல், பிப். 4 –

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோமக்கம்பேடு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் வரதன் என்பவரின் மகன் குமார் வயது 32 இவரது மனைவி நாகம்மாள் தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், சம்பவ நாளான கடந்த பிப் 1 ஆம் தேதி அன்று பூச்செடிகளுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனை அதை ஊரைச்சேர்ந்த ஏகாம்பரம் என்பவரின் மகன் முரளி என்பவர் பூப்பறிக்கும் போது பார்த்து உடனடியாக நாகம்மாளின் கணவர் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குமாரும் முரளியும் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் தொடர் சிகிச்சைப் பெற்று வந்த குமாரின் மனைவி நாகம்மாள் சிகிச்சைப் பலனின்றி பிப் 2 ஆம் தேதி இறந்து விட்டார். இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் நாகம்மாளின் கணவர் புகார் அளித்துள்ளார். அதில் தனதுமனைவி தீராத வயிற்று வலியால் பூச்சி மருந்தைக் குடித்து அதற்கான சிகிச்சை நடந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here