திருத்தணி, பிப் 3 –

திருத்தணி வீ.கே.ஆர். புரம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தேசன் என்பவரின் மகன் சூசைராஜ் வயது 55 என்பவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் அவரது மனைவி நாகம்மாள் வயது 50 என்பவரை வாகனத்தில் உட்கார வைத்துக்கொண்டு சென்றுக் கொண்டுயிருக்கும் போது, கே.ஜி.கண்டிகையில் இருந்து எதிர் திசையில் வந்த ஹீரோ ஹோண்ட வாகனத்தில் வந்தவர் வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி வந்து மோதியதால், சூசைராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழை விழுந்ததில் இருவருக்கும் ரத்தக்காயங்கள் ஏற்பட்டு இருவரையும்  திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சூசைராஜ் பலத்தக் காயம் ஏற்பட்டதால் அவருக்கு மேல் சிகிச்சைக்காக சென்னை பொது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள் நோயாளியாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இவ்விபத்து தொடர்பாக சூசைராஜ் மகன் முருகன் வயது 30 திருத்தணி காவல் நிலையத்தில் விபத்து ஏற்பட காரணமானவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து திருத்தணி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here