பூந்தமல்லி, ஜன. 3 –
செய்தி தொகுப்பு ஆவடி ராஜன்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோரஞ்சேரி ஊராட்சி அணைக்கட்டு சேரி கிராமம் இப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கான இறந்தவர்களை அடக்கம் மற்றும் எரியூட்டும் மயானம் இப்பகுதியில் செல்லும் கூவம் ஆற்றின் மறுகரையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை கூவத்திற்குள் இறங்கி மறுகரைக்கு எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் மற்றும் தீமூட்டி இந்து சமய வழக்கப்படி சடங்குகள் நடத்தி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஆனால் பெரும் மழை மற்றும் வெள்ள காலங்களில் கூவம் ஆற்றில் பெருக்கெத்து ஓடும் வெள்ளத்தினல் அக்கரைக்கு சென்று இறந்தவர்களின் உடல்களை முறையாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடியாத சூழலை எதிர் கொண்டு கடந்த 40 ஆண்டு காலமாக அல்லல் படும் அவலம் இம்மண் வாழ் மைந்தர்களின் நிலையாக உள்ளது. என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முற்போக்கு வாதிகள் என பல்வேறு தரப்பினர் இதுக் குறித்து கவலையும் துயரத்தையும் வெளிப்படுத்துகின்றனர்,
இன்று நாமும் கண் எதிரே கண்ட காட்சியும் கண்களில் கரைப் புரண்டு ஓடச்செய்கிறது கண்ணீரை … ஆம் அணைக்கட்டு சேரி கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் வயது முதிர்வு காரணமாக இன்று இயற்கை மரணம் அடைந்தார். அவரின் சடலத்தை எடுத்துச் சென்று மயானத்தில் புதைக்க முடியாமல் கிராம மக்கள் தவித்தனர். இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர்களும், பட்டாபிராம் காவல்துறையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அணைக்கட்டு சேரி கிராம மக்கள் ஆற்றங்கரை ஓரத்தில் சில குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே இடத்தில் இறந்த மோகனின் உடலை சுடுகாட்டிற்கு செல்லும் வழியிலேயே இறந்தவரின் உடலை எரியூட்டினர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு இறந்தவர்களின் உடலை எடுத்து வர அரசு அலுவலர்களை பாதுகாப்புக்கு அழைத்து வந்து இது போன்று நடைப்பாதையில் அடக்கம் செய்ய வேண்டுமா எனவும் அவர்கள் தங்களுக்குள் உள்ள ஆதங்கத்தை வெளிப் படுத்துகின்றனர்.
மேலும், இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு கால கட்டத்தில் துறை சம்பந்தப்பட்ட அலுவலர் மற்றும் அலுவலகங்களுக்கு கோரிக்கை மனுக்களை அளித்தும் இது தொடர்பாக எந்த ஒரு முடிவு எட்டப்பட வில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
நிரந்தர கட்டட மேம்பாலம் அல்லது மழைக்காலங்களில் பயன் படுத்தக்கூடிய தற்காலிக மரப்பாலங்கள் என அமைத்து இறந்தவர்களின் இறுதி சடங்குகளை தடையின்றி நடத்திட ஊராட்சி, நகர உள்ளாட்சி, மற்றும் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகம், மாநில அரசு என அனைவரும் இப்பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி 40 ஆண்டு கால பிரச்சினைக்கு நிரந்திர நல்லத் தீர்வை தர வேண்டும் என அப்பகுதி ஒட்டுமொத்த மக்களின் குரலாய் ஒலித்து நல் செய்தி கேட்க காத்திருக்கிறார்கள் …. எட்டும் தூரத்திலிருந்து ….



















