சென்னை, டிச. 24 –

கடல்நீரை எரிபொருளாக மாற்றி லிட்டருக்கு 98 கிலோ மீட்டர் பயணிக்கும் புதிய சாதனை படைத்த தமிழக சிறுவன் போலந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் அப்துல்கலாம் வழியில் பயிற்சி பெற்ற ஆனந்த் மேகலிங்கம் என்பவர் (Space Zone India) ஸ்பேஸ் சோன் இந்தியா என்ற தனியார் நிறுவனம் மூலம் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ள பள்ளி சிறுவர்களுக்கு  பயிற்சி அளித்து வருகிறார்.

அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த சந்திரசேகரன்-தங்கமணி ஆகியோரின் மகன் அகிலேஷ் 7ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு ஆராய்ச்சி பற்றி பயிற்சி அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் போலந்து நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்டுபிடிப்புகள் போட்டியில் உலகளவில் சுமார் 400 க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட மதுரையை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும்  மாணவன் அகிலேஷ் படைத்த படைப்பு தங்கம் வென்று தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கே பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவன் கடல்நீரை ஹாய் செக் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் காற்றை பிரித்து எடுத்து கடல்நீரை எரிபொருளாக மாற்றி இருசக்கர வாகனம் ஒன்றில் சோதனையிட்டதில் லிட்டருக்கு 98 கிலோ மீட்டர் வரை செல்லும் வகையில் புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சிறுவன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சாதனை படைத்த சிறுவனுக்கும், சிறுவனுக்கு பயிற்சி அளித்த ஆனந் மேகலிங்கம் ஆகியோரை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி செல்லப்பன் சாதனை படைத்த மாணவன் மற்றும் பயிற்சியாளர் இருவரையும் பாரட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

அகிலேஷ் பேட்டி

போலாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச கண்டுபிடிப்புகள் போட்டியில் உலக நாடுகள் கலந்து கொண்டு நான் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் எனது பயிற்சியாளர் ஆனந்த் மேகலிங்கம் மற்றும் பெற்றோர்கள் என தெரிவித்தார். மேலும் 4ம் வகுப்பு படிக்கும் சிறிய வயதிலிருந்தே எனக்கு கண்டுபிடிப்புகளில் ஆர்வம் இருந்தது.

ஆன்லைன் மூலம் பல்வேறு ஆராய்ச்சிகளை பார்த்திருந்த போது space zone india நிறுவனம் 100 பலூன்  சேட்டிலைட் லென்ஸ் செய்தது  டியூப் மூலம் கண்டறிந்ததாகவும், ஏபிஜே அப்துல் கலாம் பவுண்டேசன் மூலம் ஆனந் மேகலிங்கம் தொடர்பு கிடைத்தது. அதன்  மூலம் இந்த பயிற்சி பெற்று நான் தற்பொழுது உலக அளவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தங்கம் பதக்கம் வாங்கியது இந்தியா அளவில் எனக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என கூறினார்.

ருமேனியா நாடு மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமைப்புகள் கவுரவ பட்டமும் அகிலேஷுக்கு கிடைத்துள்ளது என பயிற்சியாளர் ஆனந்த் மேகலிங்கம் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here