திருவண்ணாமலை, செப்.23 –

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.

கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜெயக்குமாரி அனைவரையும் வரவேற்றார். ந.வேல்முருகன், எஸ்.ரபிபாஷா, பி.பெரியண்ணன், க.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஏ.ஆறுமுகம், இந்த பள்ளிக்கு நிறைய வசதிகள் செய்து தரவேண்டியிருக்கிறது. அவைகளை இந்த தருணத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களிடம் கோரிக்கைகளாக வைக்கிறோம்.
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய வெற்றி தமிழர் பேரவையின் தலைவர் கார்த்திவேல்மாறன், குட்டி கதைகளை சொல்லி இந்தியாவில் முதன் முதலில் சிறுகதை எழுதி வெளியிட்டவர் பாரதிதான் என்றும், மாணவர்களின் இன்றைய வளர்ச்சியே நாளை நாட்டின் வளர்ச்சி என்பதை மாணவர்கள் உணர்ந்து படிக்க வேண்டும் என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், இந்த நிகழ்ச்சிக்கு வரும்வரை பாரதியார் பற்றி பேசவேண்டும். வரலாற்றை பற்றி பேச வேண்டும் என்றெல்லாம் யோசித்து வந்தேன். ஆனால் இங்கு வந்ததும் இந்த பள்ளி வளாகத்தில் நான் வளர்ந்த நினைவுகள் மட்டுமே நெஞ்சில் நிற்கிறது. இந்த பள்ளியின் ஆசிரியர் சின்னையன் பள்ளிக்கு முதலில் வரும் மாணவர்களை அழைத்து இரண்டு மண் குடங்களை கொடுத்து பக்கத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து வகுப்பறையில் வைக்க சொல்வார். அந்த தண்ணீர் குடித்து வளர்ந்த பிள்ளைகள் தான் இந்த மேடையில் உங்கள் முன் சிறப்பு விருந்தினர்களாக அமர்ந்து இருக்கிறோம். இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு முதலில் செய்ய வேண்டியது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் உட்பட சில அலுவலகங்களை இங்கிருந்து மாற்ற வேண்டும் என்பதை முன்னாள் மாணவர் என்ற வகையில் இங்கு பதிவு செய்கிறேன்.  மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஒரு வருடத்திற்குள் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று பேசினார்.

இறுதியாக சிறப்பு விருந்தினரான எ.வ.வே.கம்பன் பேசும் போது, எப்பொழுது எல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் இந்த பள்ளி வளர்ச்சி பாதைக்கு சென்று கொண்டே இருக்கும் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரிந்தது. அந்த வகையில் இந்த முறையும் நமது அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் பள்ளிக்கான வளர்ச்சி பணிகள் விரைந்து செய்யப்படும். ஆங்கில வழி பாடத்திட்டத்தை இந்த பள்ளிக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முயற்சிகள் செய்வோம். நமது பள்ளியில் படித்த வெளிநாடுகளில் பணியாற்றும் பல்வேறு மாணவர்களை சமீபத்தில் வெளிநாடு நிகழ்ச்சி ஒன்றில் நமது அமைச்சர் எ.வ.வேலு சந்தித்திருக்கிறார். 2 நாட்கள் அவருடனே இருந்து அந்த மாணவர்கள் செய்த பணிவிடையில் அமைச்சர் மிகவும் பெருமைபட்டுபோனார். நம்பள்ளியில் படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் பல துறைகளில் முன்னனி பணியாளர்களாகவும், சாதனையாளர்களாகவும் இருப்பதை நினைத்து பெருமை கொள்வதாக பல்வேறு நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் பள்ளி கல்வி தான். என்பதை மறுத்துவிட முடியாது. பாரதியார் பன்முக தன்மை கொண்வர், அவர் 11வயதில் கவிஞர் ஆனார் என்பது மட்டுமல்ல, திறமையான பத்திரிக்கையாளர். அதுவும் வெள்ளையர் ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்த்து கருத்து சொன்ன துனிச்சல் மிகு பத்திரிக்கையாளர். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் கற்று அதில் நான் கண்ட மொழிகளிலேயே தமிழை போல் வேறு மொழிகள் இல்லை என்று தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்த மொழி பற்றாளர் பாரதியார். நமது நாட்டில் ஒரு கவிஞனின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது என்றால், அது பாரதியாரின் கவிதைகள் தான். இறுதியாக இங்கிருக்கும் மாணவர்கள் இன்னும் 25 ஆண்டுகள் ஆன பின்பு முன்னாள் மாணவர்களாக இதே போன்று விழாவை நடத்தி பெருமை சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று பேசினார். அதைத்தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் சார்பில் எ.வ.வே.கம்பனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதே போல் முன்னாள் மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து எ.வ.வே கம்பன் கவுரவித்தார். நிகழ்ச்சியில், ந.பழனி, அ.கண்ணன், த.ம.பிரகாஷ், இலகுணசேகரன், காலேஜ் ரவி, வழக்கறிஞர்கள் இரா.கார்த்திகேயன், ந.ப.கார்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி ஏற்பாடு தி.பாரதி, ச.ரவி, சு.செல்வம்,  சே.ரஞ்சித்குமார், ச.ராமதாஸ், அ.செ.பாஸ்கரன், ஜெ.மதிவாணன், சு.ஸ்ரீராஜி, என்.ரமேஷ், ஸ்ரீஜோதிஸ்குமார், சு.சிவப்பிரகாசம், பி.ஏ.அப்சரலி, வி.சம்பத், அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சங்க செயலாளர் ஆ.ஜான்வெலிங்டன் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here