திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், அணுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் திறந்து வைத்தார்.

செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி

திருவண்ணாமலை ஆகஸ்டு 17 –  

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், அணுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, இவ் வூராட்சியினால் நாரையூர், அண்டம்பள்ளம், இசுகழிக்காட்டேரி, இராஜந்தாங்கல், வேட்டவலம், வைப்பூர், ஆகிய கிராமங்கள் தினசரி 30 மெட்ரிக் .டன் அளவிற்கு கொள்முதல் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி உற்பத்தி செய்யப்படும் நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் வாயிலாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களான அணுக்குமலை, கொளத்தூர்;, மண்டகொளத்தூர், வண்ணாங்குளம், தச்சூர், எலத்தூர், வல்லம், மருதாடு, கொவளை, நல்லூர், நெடுங்குணம், நம்பேடு, மேல்சீசமங்கலம், பாராசூர், தவசிமேடு, நாவல்பாக்கம், புளியரம்பாக்கம், ஆக்கூர், நாட்டேரி, அரியூர், தூசி, வெம்பாக்கம், பெருங்கட்டூர் ஆகிய 23 இடங்கள் மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலமாக போளுர் கூட்டுறவு மார்கெட்டிங் கமிட்டி மற்றும் ஆரணி கூட்டுறவு மார்கெட்டிங் கமிட்டி ஆகிய 2 இடங்கள் ஆக மொத்தம் 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 16.08.2021 முதல் திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யவும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மற்ற 24 நேரடி நெல் கொள்முதல் நிலையைங்களும் திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சன்னக ரக நெல் குவிண்டல் ஒன்றுக்கு ரூ.1,958 வீதமும், பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1,918 வீதமும் கொள்முதல் செய்யப்படுகிறது.

விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் நெல்லிற்கு உண்டான தொகையினை அவர்களது வங்கி கணக்கில் இசிஎஸ் முறையில் செலுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

இம்முறை விவசாயிகள இணைய தளத்தில் பதிவு செய்து, டோக்கன் பெற்று அதனுடன் அனுமதி சீட்டு படிவம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த படிவத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலரின் கையப்பம் மற்றும் முத்திரை பெற்று அத்துடன் சிட்டா அடங்கல் தற்போது பெறப்பட்ட ஆதார் நகல் வங்கி கணக்கு புத்தக நகல் இவற்றுடன் டிசிபி-க்கு நெல் கொண்டு வந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்திரவிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர், கோபிநாத், வேளாண்மை இணை இயக்குநர், த.முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெ.சத்தியமூர்த்தி, அரசு அலுவலர் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here