திருவண்ணாமலை, ஜூலை. 26-

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா அரட்டவாடி கிராமம் மல்லிகாபுரம் தண்டா பகுதியைச் சேர்ந்த லம்பாடி சமுதாயத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி செல்வி என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது எனக்கு 2 மகன்கள் உள்ளனர் அவர்களுக்கு திருமணமாகி கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம் என் கணவர் இறந்து விட்ட எனது கணவரும், எனது மூத்த மகனும் கண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆவர். நாங்கள் அனுபவித்து வரும் புறம்போக்கு நிலம் ஒரு ஏக்கர் எங்களுக்கு அரசால் வழங்கப்பட்டதாகவும் இதில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி கிணறு வெட்டும் அனுபவித்து வருகிறோம் இந்த நிலையில் தனது கணவர் பெயரில் உள்ள நிலத்தில் பாதியை மகனின் மனைவி பெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்து வைத்தோம்.  ஆனால் எனது மருமகள் பெயரில் உள்ள நில சிட்டாவிலும்,  வரைபடத்திலும் எங்கள் நிலையத்திற்குப் பக்கத்தில் நிலத்துக்கான அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் குமார் என்ற பெயருக்கு தவறுதலாக சேர்த்து விட்டனர். இதனைப் பயன்படுத்தி அவர் எங்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார் மேலும் நிலத்தை கொடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் பார்த்து விடுவோம் என மிரட்டல் விடுக்கிறார். எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here