ராமநாதபுரம், செப். 3- ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் 17வது மாநாடு மற்றும் பொதுப் பேரவை கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் தனியார் மகாலில் நடந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 17வது மாநாட்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சுரேஷ் வரவேற்றார். தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் தலைவர் வைரப்பன் தொழிற்சங்க கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் செயலாளர் காசி விஸ்வநாதன் மாநாடு சிறப்புரையாற்றினார். ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் ஜெயஜோதி இணைபதிவாளர் முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக பங்கேற்றனர். தமிழ்நாடு கூட்டுறவு வங்கி சங்க துணை தலைவர் முனுசாமி, தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சம்மேளனம் பொது செயலாளர் சுப்பிரமணியன், கன்னியாகுமரி மாவட்ட பொது செயலாளர் சுரேஷ், மதுரை மாவட்ட பொது செயலாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டில் நீண்ட காலமாக வெளியிடாமல் உள்ள பணியாளர் களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் பணியாளர் களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், மாநில ஆள் சேர்ப்பு மையம் மூலமாக புதிதாக பணியமர்த்தப்பட உள்ள பணியாளர்களுக்கு ஒருமுறை மட்டும் அவர்களது விருப்பத்திற்கிணங்க சொந்த மாவட்டங் களுக்கு பணியிட மாறுதல் செய்து தரக்கோரி மாநில பதிவாளரை கேட்டு கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.