தேனி வண்ணான்குளம் ஊரணியை ரூ.பத்து லட்சம் மதிப்பீட்டில் அரசு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணியை செய்து வருகிறது. இப்பணிக்காக பல தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் என தங்களால் இயன்ற நிதியினை இப்பணிக்காக வழங்கினர்.
தேனி; ஜூலை, 20- தேனி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி போர்க்கால அடிப்படையில் அணைகள் குளங்கள் ஏரிகள் தூர் வாரப்பட்டு மழை வரும் காலங்களில் மழைநீர் சேகரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆலோசனைப்படி தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்கள் உத்தரவின்படி
நேற்று முதல் கோவிந்த நகரத்தில் உள்ள ஐந்து ஏக்கரில் உள்ள வண்ணான்குளம் ஊரணியினை தூர் வாரும் நடைபெற்று வருகிறது. இந்தவண்ணான் குளம் ஊரணிக்காக கே.வி.ஆர். கிருஷ்ணசாமி 60 சென்ட் நிலத்தை பொது மக்களுக்காக குளத்தோடு சேர்ந்து இருக்கும் இடத்தை இலவசமாக வழங்கியுள்ளார்.
ஆழ்வார் சாமி என்பவர் ஒன்றரை ஏக்கர் குளத்தோடு சேர்ந்திருக்கும் அவரது சொந்த நிலத்தை பொதுமக்களுக்காக ஊரணி குளம் அமைப்பதற்கு வழங்கியுள்ளார். வண்ணான் குளம் ஊரணி ஐந்து ஏக்கர் இருந்த நிலையில் இருவர் தானமாக வழங்கிய நிலையில் அதன் தற்போதைய வண்ணான் குளம் ஊரணி பரப்பளவு ஏழு ஏக்கர் 10 சென்ட் என்ற நிலையில் உயர்ந்துள்ளது.
இக்குளத்தை தூர்வாருவதற்கு அரசு உதவியுடன் பல தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் நிதியளித்து 10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகின்றது. இந்த ஊரணி குளத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை வழியாக பூமலை குண்டு வேப்பம்பட்டி ஜங்கால்பட்டி ஓடை வழியாக வண்ணான் குளத்தில் மழை நீர் வந்து சேரும். இத்திட்டத்தின் மூலமாக வண்ணான் குளம் ஊரணி நிரம்பி அம்பாசமுத்திரம் மற்றும் கோவிந்த நகரம் இடையில் வைகை அணைக்கு ஓடை வழியாக மழைநீர் சென்றடையும் .
இதன்காரணமாக கோவிந்த நகரத்தில் உள்ள பி டி ஆர் கால்வாய் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கண்மாய் கோவிந்த நகரம் பெரிய கண்மாய் ஆகியவை தூர்வாரப்பட்டு வருகின்றன.
முப்பது வருடங்கள் கழித்து குளங்கள் கண்மாய்கள் தூர்வார படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசிற்கு நன்றி கூறி வருகின்றனர். குளங்கள் ஏரிகள் கண்மாய்கள் தூர்வரும் ஊரணியினை கோவிந்த நகரம் ஊராட்சி செயலாளர் செந்தில் ஆண்டவர் மற்றும் அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டனர்.