இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் / தேர்தல் தலைமை அலுவலர் கொ.வீரராகவராவ் தலைமையில் தமிழ்நாடு இசைப் பயிற்சிப் பள்ளி மாணவியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்ட சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்சிகளுடன் கூடிய வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரண்மனை அருகே கையில் வாக்களர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளுடன் பல விதமான கலை நிகழ்ச்சிகளை செய்துக் காட்டி வாக்களர்களர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற உறுதி மொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழியை திரும்பக்கூறி உறுதியேற்றனர். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் த.கெட்சி லீமா அமலனி உள்ளார்.