திருவாரூர், ஜூலை. 21 –
மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டியினை பூவனூரில் சிறப்பு பூஜை செய்து துவங்க வேண்டும் என கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் நிறுவனத் தலைவர் தவத்திரு திருவடிக்குடல் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா, திருப்புவனூர் எனும் பூவனூரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் சமேத சதுரங்க வல்லபேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே சதுரங்க போட்டி குறித்த ஒரு பதிவு தமிழகத்தில் இருக்கிறது. இந்தியாவில் இருந்துதான் இந்த விளையாட்டு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு சென்று இருக்கிறது. இதில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது உண்மை உலக அளவில் சதுரங்க போட்டிகளில் கோளோச்சிக் கொண்டிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் தற்போதைய பள்ளி மாணவர் பிரக்ஞானந்தா தமிழகத்தை சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, சர்வதேச சதுரங்க போட்டி தமிழகத்தின் நடைபெற உள்ள சூழ்நிலையில் பழமையான திருக்கோவில் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவே இங்கு தமிழக அரசின் சார்பாக ஒரு சிறப்பு பூஜை செய்து இந்த விழா தொடங்கினால் நன்றாக இருக்கும் என கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் நிறுவன தலைவர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் உள்ள 127 திருத்தலங்களில் 103வது தலமாக போற்றப்படுவது திருப்பூவனூர் அருள்மிகு சதுரங்க வல்லபேஸ்வரர் திருக்கோயில் ஆகும். திருநாவுக்கரசு நாயனார் தேவாரப் பதிகம் அருளிச் செய்த தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தின் வரலாற்றின்படி சிவபெருமானும் இவ்வூர் மன்னனின் மகளாக அவதாரம் செய்திருந்த உமையவளும் இந்த தலத்தில் சதுரங்க போட்டி விளையாடியதும் அதில் சிவபெருமான் வெற்றி பெற்று மன்னனின் மகளை திருமணம் செய்து கொண்டதாகவும் புராண வரலாறு கூறுகிறது. அம்பிகையின் பெயர் ராஜராஜேஸ்வரி என்று வழங்கப்படுகிறது. சதுரங்கப் போட்டியில் ராணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவைகளை அவர் குறிப்பிட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பேட்டி: தவத்திரு திருவடிக்குடி சுவாமிகள்.
( நிறுவனர் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் கும்பகோணம்)