திருவாரூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு 690 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
தொடர்ந்து மாணவிகளிடையே உரைநிகழ்த்திய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா…
தொழில்துறையில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது எனவும், மேலும் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் முன்பு பெண்கள் படிக்கும் போதே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிலை இன்று மாறி உள்ளது என்றார்.
மேலும் தற்போது இளங்கலை படிப்பு படித்த பின்னர் தமது வீட்டுப் பெண் பிள்ளைகள் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எண்ணுகின்றனர் என்றவாறு உரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடங்கள் பெற்று தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு மாணவிகளின் பெற்றோர்களின் கைகளால் பட்டமளிக்க வைத்து அமைச்சர் அம் மாணவிகளை கௌரவித்தார்.
சிறப்புமிகு அவ்விழாவில் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என திரளானவர்கள் அவ்விழாவில் பங்கேற்று மேலும் அவ்விழாவிற்கு சிறப்புச் சேர்த்தனர்.