காஞ்சிபுரம், செப். 06 –

காஞ்சிபுரம் அருகே இயங்கி வரும் தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிப்பு தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜகுளம் பகுதியில் தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் 400 தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இரவு நேர சுற்று பணிக்காக நூறு தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலை உணவகத்தில் இரவுநேர உணவை சாப்பிட்டுவுள்ளர். அப்போது தொழிலாளர்களுக்கு வழங்கிய ரசத்தில் பல்லி விழுந்துவுள்ளதாக தெரிய வருகிறது.

இது குறித்து அறிந்த தொழிலாளர்கள் பதட்டம் அடைந்த நிலையில் 20 பேருக்கு வாந்தியும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் அனைத்து தொழிலாளர்களும் பதற்றம் அடைந்த நிலையில் அவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யப்பட்டது.

இச் சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here