திருவேற்காட்டில் இன்று காலை 7 மணிக்கு கொரோனோ மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது. இதில் ஏராளமான பொது மக்கள்  முகாமின் சேவையை பயன் படுத்திக் கொண்டு தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டு வருகிறார்கள்.

திருவேற்காடு, செப். 12 –

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைத்திட தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில், அனைத்து மாவட்டங்களிலும் இன்று சிறப்பு முகாம் நடைப் பெற்று வருகிறது.

இதில் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் 1 லட்சம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான ஆய்வுக் கூட்டங்களை நடத்தியும், அதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தி நடவடிக்கைகளை மேற் கொண்டு, இன்று இம் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அதிகாலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைப் பெறும் என்பதை முன் கூட்டியே மாவட்டம் முழுவதும், ஆட்டோக்களில் ஒலி பரப்பி மூலம் அறிவிப்பை வெளியிட்டதின் கீழ், விழிப்புணர்வோடு பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை இன்று அவர்கள் பயன் படுத்திக் கொண்டு தடுப்பூசிகளை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.

அதனைப் பின் பற்றி திருவேற்காடு நகராட்சியின் தொடர் நடவடிக்கையால் இந்த நகராட்சிக்கு உட் பட்ட 18 வார்டுகளிலும்,  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை ஏற்பாடு செந்துள்ளனர். அம் முகாமினை தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு .நாசர் வழிகாட்டுதல் படி, நகரச் செயலாளர் என்.இ.கே. மூர்த்தி தலைமையில் 18 வார்டுகளில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்று வருகிறது.

இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை  நடைப் பெறும் இச் சேவையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொரோனா தொற்று நோய் இல்லா நகராட்சி ஆக்கிட முன்றாவது வார்டு வானகரம் அம்பத்தூர் நெடுஞ்சாலை மூன்று சிலை அருகில் வட்டக் கழக செயலாளர் தெய்வசிகாமணி முகாமை தொடங்கி வைத்தார்.

3 வது வார்டு நகர பிரதிநிதி சம்பத் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டார். உடன் பிரியன் குமார் கோபி கார்த்தி வெங்கடேசன் இளங்கோவார்டு இளைஞர் அணி மகளிர் அணி வட்டக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் கூட்டத்தை ஒழுங்கு படுத்தியும்,  கிருமி நாசினிகளை தெளிக்க ஏற்படுகளை செய்தும், பொது மக்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்த படி வரிசையில் நின்று தடுப்பு ஊசி செலுத்த வழி வகுத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here