கண்டியூர், மே. 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சை மாவட்டம், கண்டியூரில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு. பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் கண்டியூரில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு மங்களாம்பிகை சமேத பிரம்ம சிர கண்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த கோவிலின் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் இன்று நடைபெற்றது

மங்களாம்பிகை சமேத பிரம்மசிர கண்டீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர் ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்  திருத்தேர் நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here