சென்னை, ஜூன் 1 –

சென்னை பெருநகர மாநராட்சி ஐந்தாவது மண்டலத்திற்குட்பட்ட பூங்காநகர் தொகுதியில் உள்ள சௌகார்பேட்டை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அருகே உள்ளது பிப்பின்குமார் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக மூன்றடுக்கு கட்டடம். அதற்கு, உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து எந்தவிதமான முறையான கட்டட அனுமதி பெறாமல் மூன்றடுக்கு வணிகவளாகத்தை கட்டி முடித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக கடந்த 12.12.2014 ஆம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சி 5 வது மண்டல அலுவலரால் கட்டட பணி நிறுத்த அறிவிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் பொருட்டு எந்தவித எதிர் விளைவுகளையும் கட்டட உரிமையாளர் மேற்கொள்ளாமல் கட்டடத்தை கட்டி முடித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக, தொடர் நடவடிகைகயாக மாநகராட்சியின் சார்பில் தாமதமாக 7 ஆண்டுகளுக்கு பின் கடந்த 16.07.2021 அன்றும், மேலும் 26.03.22 அன்றும் கட்டடத்தை சீல் வைத்து மூடுவதற்கும், ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்த முன் அறிவிப்புகளையும் வழங்கிவுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் சென்னை தண்டையார் பேட்டை துர்காதேவிநகர் சால்ட் குறுக்குத் தெருவைச்சேர்ந்த பா.விஜயகுமார் என்பவர் கடந்த 28.03.22 ஆம் தேதியன்று முறையிட்டு புகார் மனுவை அளித்துள்ளார்.

அவர் முறையிட்ட அம்மனுவில் மூன்றுக்கும் மேற்பட்ட புகார்களை பதிவு செய்துள்ளார்.

1 சென்னை பெருநகர் இரண்டாம் வளர்ச்சித்திட்டம் 2026 ன் படி அக்கட்டடம் அமைந்துள்ள சாலையான தங்கசாலை 18 மீட்டர் மாற்றம் செய்ய வேண்டிய சாலையெனவும், இதனால் அதற்காக தேவைப்படும் நிலங்கள், வளர்ச்சித்தொகை ஆகியவை கட்ட ட அனுமதிப் பெறும் போது கட்டட உரிமையாளரிடம் இருந்து பெறப்படவேண்டும்.

2 இதனைக் கண்காணிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தவறிவிட்டதால் மாநகராட்சிக்கு வருமான இழப்பும், மேலும் மேற்கண்ட வளர்ச்சி திட்டப்பணி முறையாக நடைமுறைப்படுத்த பெரும் இடைஞ்சலாக உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

3  மிக முக்கியமான குற்றச்சாட்டாக அந்த மூன்றடுக்கு வணிக வளாக கட்ட டத்தை எழுப்பியுள்ள இடம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் எனவும், எனவே அந்நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடனேயே கட்டடம் கட்டும் அனுமதியை மாநகராட்சியில் வாங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

4 இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அலுவலர்கள் அலட்சியப்போக்கோடும், மேலும் அந்நக் கட்ட டத்தை அனுமதியின்றி எழுப்பியுள்ள நபர் உள்ளூர் செல்வாக்கு நிறைந்தவர் என்பதால் அவருக்கு சாதகமாக அவர்கள் முன்னுக்கு பின்னான தகவல்களை அளிக்கப்பட்ட புகார்களுக்கு அவருக்கு சாதகம் நிறைந்த பதலளித்தனர். என அவர் முறை மன்ற ஆணையத்தில் வழங்கிவுள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதன் மீதான விசாரணையை மேற்கொண்ட முறை மன்ற நடுவம் கடந்த கடந்த மே 11 – 2022 அன்று மனுதாரர் பா.விஜயகுமார் மற்றும் மண்டல அலுவலர் மண்டலம் – 5 ஆகியோருக்கு அழைப்பாணைகள் வழங்கி நேரடி விசாரணையில் கலந்துக்கொள்ள வழங்கப்பட்டது.

அதன்படி கடந்த மே.18 – 2022 ஆம் தேதி கலந்துக்கொண்ட இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.

அதனின் முக்கிய சாரம்சங்களை கண்டறிந்து முறை மன்ற நடவம் பின்வருமாறு தீர்ப்பு வழங்கி ஆணைப்பிறப்பித்துள்ளது.

மண்டலம் 5 ஐச் சேர்ந்த உதவி பொறியாளர் வாக்கு மூலத்திலிருந்து 12 .12.2014 அன்று ஸ்டாப் ஒர்க் நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு பின்பு லாக் அன்ட் சீல் அன்ட் டெமாலிசன் நோட்டீஸ் 16,07.2021 – ல் வழங்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும், கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கடந்து தாமதமாக அடுத்த கட்ட நடவடிக்கை மண்டலம் 5 ஐச்சேர்ந்த அலுவலர்களால் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய மாநகராட்சி அலுவலர்கள் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டி வந்ததும், அதைக் கண்டும் காணாமல் இருந்துள்ளதும் மிகவும் கண்டிக்கத் தக்கது. மாநகராட்சி அலுவலர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது இந்நிகழ்வில் கண்கூடாக தெரிகிறது. இதனை மேலுள்ள அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது தனக்கு கீழுள்ள அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டிய பணிகள், ஆய்வு கட்டடங்கள் மூலம் கண்காணிக்க தவறியதும் இதன் மூலம் தெளிவாகிறது.

மண்டலத்தில் நடக்கக் கூடிய நிகழ்வுகளை மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது உரிய ஆய்வு செய்து இருந்தால் இதுப்போன்ற நிகழ்வுகள் நடைப்பெறாமல் தடுக்கப்பட்டிருக்கும். இதற்கு தார்மீக பொறுப்பு அந்த மண்டல அலுவலருக்கு உள்ளது. ஆகவே உரிய முறையில் கள ஆய்வு செய்து அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இதுப்போன்று புகார்கள் வர வாய்ப்பில்லை என்பது நிதர்சனமான உண்மை எனவே இனி வரும் காலத்தில் மண்டல அலுவலர்கள், ஆக்கிரமிப்புகள் தொடர்பான ஆய்வு கூட்டங்களையும், கள ஆய்வும் செய்து இதுப்போன்ற நிகழ்வுகள் நடைப்பெறாதிருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முறை மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பரிந்துரைத்து முறை மன்ற நடுவம் ஆணையிட்டுள்ளது. மேலும், தொடர் நடவடிக்கையாக அனுமதியற்ற கட்டடத்தின் மீது மாநகராட்சியால் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ள மண்டலம் 05 –ன் மண்டல அலுவலருக்கு முறை மன்ற நடுவம் அறிவுறுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here