திருவேற்காடு டிச. 6 –
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் ஆறாவது வார்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவராணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திமுக 6 வது வட்டச் செயலாளர் ஏற்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், பால்வள அமைச்சருமான சா.மு.நாசர் பங்கேற்று பத்துகிலோ எடை கொண்ட அரிசி பைகளை நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார் .
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் கற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக மழை வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடியிருப்பு பகுதி மற்றும் வீட்டிற்குள்ளும் மழை வெள்ளம் புகுந்து அவர்களின் அன்றாட இயல்பு நிலை பாதிப்புக்களுக்கு உள்ளானது. இந்த இன்னலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அவர்களின் இயல்பு நிலை பாதிப்பை சரி செய்யும் விதமாகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில் திமுகவின் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் ஆறாவது வார்டு திமுக வட்டச்செயலாளர் தெய்வசிகாமணி ஏற்பாட்டில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 10 கிலோ எடை கொண்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி பைகள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பால்வளத்துறை அமைச்சரும் மாவட்டச் செயலளாருமான சா.மு.நாசர் பயனாளிகளுக்கு மழை வெள்ள நிவராணப் பொருட்களை வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் நகர செயலாளர் என். இ. கே. மூர்த்தி, இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன், வர்த்தக அணி அமைப்பாளர் ஏ. ஜெ. பவுல், மாவட்ட பிரதிநிதி செல்வதுரை, ஆறாவது வார்டு வட்டக் கழக பொறுப்பாளர்கள், அவைத் தலைவர் கோபிநாதன், வெங்கடேசன், சம்பத், இளங்கோவன், மாணவரணி பிரியகுமார், மணிகண்டன், கார்த்தி, தமிழ்ச்செல்வன், ராஜாராம், தமிழ்ச்செல்வன் ராமு, அந்தோணி ,குணசேகரன், மற்றும் மாவட்ட நகர இளைஞர் அணி மகளிர் அணி மாணவரணி பொறுப்பாளர்கள் என ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.