தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
பெண் காவலர்கள் குறித்து அவதூராக பேசிய சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு யூடியூப் பேட்டியில் பெண் காவலர்களை தர குறைவாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் யூடியூப் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். அவர் மீது 294(B) பிரிவு மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சவுக்கு சங்கரை கைது செய்ய வேண்டும்.
மேலும் தஞ்சை சவுக்கு சங்கர் மீது தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். இதே போல் சவுக்கு சங்கர் பேசியதை வெளியிட்ட ரெட் பிக்ஸ் பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வெளியே வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.