நந்தியம்பாக்கம், டிச. 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது.
அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமை வகிக்க, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஒன்றிய கதிரவன், வார்டு உறுப்பினர்கள். காதர்பாஷா, வள்ளி வில்வநாதன், விக்னேஷ், வரதராஜ், குணசுந்தரி, ஊராட்சி செயலர் பொற்கொடி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,
அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து புதியதாக ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கபட்ட அந்து அரசு நியாய விலை கடை கட்டடத்தை, சிறப்பு அழைப்பாளர்கள் மக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ்காந்தி நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த அரசு நியாய விலைக்கடையினை அமைத்துக் கொடுத்தது மட்டுமின்றி, அதனை திறந்து வைப்பதிலும் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், மேலும் இது போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை இப்பகுதி மக்களுக்கு தான் தொடர்ந்து செய்துக் கொடுக்க கடைமைப்பட்டுள்ளதாகவும் அப்போது தெரிவித்தார்.
மேலும் அச்சிறப்பு மிகுந்த விழாவில், கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன், அத்திப்பட்டு புருஷோத்தமன், சாய் சரவணன், மீஞ்சூர் அபூபக்கர், கலைமணி, சக்கரவர்த்தி, தொழிலதிபர் மதன், கலாநிதி, ராமதாஸ், ரவிசங்கர், மகி, கார்த்திக் உள்ளிட்டவர்களும் திரளான அப்பகுதிவாழ் குடியிருப்புவாசிகளும் கலந்து கொண்டனர்.